நம்ம ஊரு கடையம்
கடவுள் நம்மோடு இருக்கும் வரை நமக்கு எதிரிகள் இல்லை.
Saturday, December 31, 2011
Monday, April 11, 2011
5 ஆண்டு தேவையை நிறைவேற்றுமா 500 ரூபாய் பணம்?
வாக்களிப்பது ஒவ்வொரு வாக்காளனின் கடமை. காசுக்காக வாக்குகளை விற்பது ஜனநாயகத்தின் கழுத்தை அறுப்பது போல, நமக்கு நாமே தீயை வைப்பது போல..
சில ஆண்டுகளாக தேர்தல் களம் என்பது மக்களின் நம்பிக்கை என்பது போய் பணத்தின் மீது நம்பிக்கை என்ற பாதையில் பயணிக்கிறது. சமுதாயத்திற்கு மிகவும் ஆபத்தாக..., வலிய வந்து லஞ்ச வாங்க வைக்கும் தூண்டும் சக்தியாக தேர்தல் அமைந்து வருவது வேதனையான ஒன்றாக இருக்கிறது.
வாக்கின் வலிமையை அறியாதவர்கள் இன்னும் இருக்கதான் செய்கிறார்கள். கை விரலில் வைக்கப்படும் மை அரசியல்வாதிகளின் தலையெழுத்தை மாற்றக்கூடியதாக இருக்க வேண்டும்.
நமது வாக்கை அரசியல்வாதிகளின் ரூ.500 பணத்திற்கு விற்றோம் என்றால் அடுத்த 5 ஆண்டுகளில் கேள்வி கேட்கும் அதிகாரமே இல்லாத, கூனி நிற்கும் நிலைக்கு ஒவ்வொருவரும் தள்ளப்படுவோம்.
தங்களின் 5 ஆண்டு தேவையை நிறைவேற்றுமா அந்த பணம் என்பதை எல்லோரும் உணர வேண்டும். தங்கள் வாக்கின் வலிமை எல்லாவற்றையும் மாற்றியமைக்க வேண்டும்.
தேர்தலுக்கு தேர்தல் குடிசைகளை தேடி வந்து ஆதரவு கரம் நீட்டும் அரசியல்வாதிகள், வெற்றி பெற்ற பிறகு தொகுதி பக்கம் வந்திருக்கிறார்களா? என்பதை எண்ணி பாருங்கள். உங்களுடன் இன்ப&துன்பங்களில் பங்கேற்றுகிறார்களா? என்பதையும் எண்ணி பாருங்கள்.
தங்கள் கட்சிகளின் வேட்பாளர்கள் என்ற கணக்கில் வாக்களிக்க முயன்றால் சாலையில் தோன்றும் காணல் நீர் போல் தான் வாக்காளர்களின் வாழ்க்கை அமையும்.
நம்மை ஆள்பவர்கள் எப்படி இருக்க வேண்டும்? ஆண்டவர்கள் எப்படி இருக்கிறார்கள்? ஆள துடிக்கிறவர்கள் எப்படி இருக்கிறார்கள்? என்பதை எண்ணி பார்த்து ஒவ்வொருவரும் வாக்களித்து ஒரு நல்ல தலைமையை தேர்ந்தெடுக்க வேண்டும்.
தயவு செய்து யாரும் தங்கள் வாக்குகளை மட்டும் காசுக்காக விற்று வீடாதீர்கள்.

Wednesday, March 2, 2011
மகா சிவராத்திரி....
Thursday, February 17, 2011
கோட்டையை அ.தி.மு.க. கைப்பற்றுமா?
5 ஆண்டுக்கு ஒரு முறை வரும் திருவிழா. இந்த ஆண்டு நடக்க இருக்கிறது. மே மாதம் நடக்க இருக்கும் சட்டமன்ற திருவிழாவிற்கு இப்போதே வாழைமரம், தோரணத்தை கட்டி உறவினர்களை அழைக்க தொடங்கியிருக்கிறார்கள் அரசியல் கட்சியினர்.
பேசாத மைக்கும்... பேச காத்திருக்கிறது. தண்ணீரை பாத்திராத தெருக்கள் கூட கூட்டி மெழுகி போடப்பட்டிருக்கிறது பிரசார மேடை அமைப்பதற்காக...
பெயிண்டை பார்க்காத சுவர் கூட வண்ணமயமாக காட்சியளிக்க தொடங்கியிருக்கிறது சின்னங்களுடன்..
அப்பப்பா... ம்...ம்..
தேர்தல் நெருங்குகிறதே...
கரை வேட்டிகளுக்கு கடையில் பெரிய டிமாண்ட்...
விற்பனை அதிகரிக்க தொடங்கியிருக்கிறதே...
காது இருக்கிறது... கேட்கலாம் காதில் ரத்தம் வரும் வரை.
5 ஆண்டின் தலையெழுத்தை நிர்ணயிக்க போகும் தேர்தல் என்றாலும்...தேர்தல் கால நிகழ்வுகள் எல்லாம் ஜாலியாக தான் இருக்கிறது போங்க..
இந்த ஜாலியோடு இந்த அடுத்த 5 ஆண்டில் தமிழகத்தை ஆள போவது யார்? கொஞ்சம் அலசி பார்க்கலாம்.
2006 தேர்தலில் தி.மு.க.வுடன் இருந்த இரண்டு கம்யூனிஸ்டு கட்சிகள், பா.ம.க., போன்ற கட்சிகள் இந்த முறை தி.மு.க.வுடன் இல்லை. காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் இந்த 2 பிரதான கட்சிகளை அவர்களுடன் கூட்டணியில் இருக்கின்றனர்.

தமிழகத்தை பொறுத்தவரையில் இரண்டு பெரிய கட்சிகள். ஒன்று ஆளும் தி.மு.க., மற்றொன்று எம்.ஜி.ஆரால் நிறுவப்பட்ட அ.தி.மு.க. தனிப்பட்ட முறையில் தொண்டர்கள் பலம் என்று பார்த்தால் தி.மு.க.வை காட்டிலும், அ.தி.மு.க.விற்கு அதிகம். கடந்த தேர்தலில் அ.தி.மு.க. குறைந்த தொகுதிகளை கைப்பற்றியிருந்தாலும் 32 சதவீத வாக்குகளையும், பெரும்பான்மையான தொகுதிகளை கைப்பற்றிய தி.மு.க. 26 சதவீத வாக்குகளையும் பெற்றிருந்தது.
அ.தி.மு.க.வை பொறுத்தவரையில் இந்த தேர்தலை வாழ்வா? சாவா? என்ற முறையில் சந்திக்கிறது. கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா எப்படியாவது ஆட்சியை கைப்பற்றியே தீர வேண்டும் என்று முனைப்போடு கூட்டணியை பலப்படுத்தும் முயற்சியில் இருக்கிறார். தற்போது அ.தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க., இரண்டு கம்யூனிஸ்டு கட்சிகள், நடிகர் கார்த்திக் கட்சி, புதிய தமிழகம் போன்ற கட்சிகள் இருக்கிறது.
அரசியல்லில் திடீரென்று இறங்கி கடந்த சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளில் போட்டியிட்டு 8.85 சதவீத வாக்குகளுடன் ஒரு தொகுதியில் வெற்றி பெற்ற விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.க. இந்த முறை அதிக இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என்று விரும்புகிறது. அது கூட்டணியா? அல்லது தனித்தா? என்பது குறித்து கட்சியில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திக்க தே.மு.தி.க. விரும்புவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
பா.ம.க.வை பொறுத்தவரையில் அந்த அணியா? இந்த அணியா? என்று குழப்பி வருகிறது. இரு பக்கத்திலும் இருந்து தூது வருவதாக கூறப்படுகிறது.
கூட்டணி நிலவரம் இப்படி இருக்க...
மக்களின் மனநிலை எப்படி இருக்கிறது? தி.மு.க.விற்கு பலவீனமாக இருக்கும் ஸ்பெக்ட்டரம் விவகாரம், இலங்கை தமிழர் பிரச்சினை, விலைவாசி உயர்வு, மின்வெட்டு போன்ற பிரச்சினைகள் காலை வாரி விடுமா? அல்லது சாதனைகளாக கருதப்படும் இலவச கலர் டி.வி., இலவச கியாஸ் இணைப்பு, 2 ஏக்கர் நிலம், ரேசனில் மாளிகை பொருட்கள், கலைஞர் வீடு வழங்கும் திட்டம், கலைஞர் உயிர் காக்கும் திட்டம் போன்றவை கைக்கொடுக்குமா? என்பது தெரியவில்லை.
கூட்டணி கணக்கில் வெற்றியா? பிரச்சினைகளை மையமாக வைத்து வெற்றியா? சாதனைகளுக்கு மக்கள் வாக்களிப்பார்களா? என்பது மக்களின் மன ஓட்டத்தை பொறுத்தே அமைய இருக்கிறது. 234 தொகுதிகளிலும் மக்கள் மனநிலை அப்படி தான் இருக்குமா? தொகுதிகளின் நிலவரம் என்ன? என்பது இனி வரும் காலங்களில் தெரிய வரும். மக்களின் நாடி துடிப்பை அறிந்து கொள்ள அரசியல் கட்சி தலைவர்கள் இப்போதே தயாராகி விட்டார்கள்.
கூட்டணி, தொகுதி பங்கீடு என்று அ.தி.மு.க. முதற்கட்டமாக தனது தேர்தல் பணியை முடிக்கி விட்டு இருக்கிறது.
(இன்னும் பேசலாம்)
பேசாத மைக்கும்... பேச காத்திருக்கிறது. தண்ணீரை பாத்திராத தெருக்கள் கூட கூட்டி மெழுகி போடப்பட்டிருக்கிறது பிரசார மேடை அமைப்பதற்காக...
பெயிண்டை பார்க்காத சுவர் கூட வண்ணமயமாக காட்சியளிக்க தொடங்கியிருக்கிறது சின்னங்களுடன்..
அப்பப்பா... ம்...ம்..
தேர்தல் நெருங்குகிறதே...
கரை வேட்டிகளுக்கு கடையில் பெரிய டிமாண்ட்...
விற்பனை அதிகரிக்க தொடங்கியிருக்கிறதே...
காது இருக்கிறது... கேட்கலாம் காதில் ரத்தம் வரும் வரை.
5 ஆண்டின் தலையெழுத்தை நிர்ணயிக்க போகும் தேர்தல் என்றாலும்...தேர்தல் கால நிகழ்வுகள் எல்லாம் ஜாலியாக தான் இருக்கிறது போங்க..
இந்த ஜாலியோடு இந்த அடுத்த 5 ஆண்டில் தமிழகத்தை ஆள போவது யார்? கொஞ்சம் அலசி பார்க்கலாம்.
2006 தேர்தலில் தி.மு.க.வுடன் இருந்த இரண்டு கம்யூனிஸ்டு கட்சிகள், பா.ம.க., போன்ற கட்சிகள் இந்த முறை தி.மு.க.வுடன் இல்லை. காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் இந்த 2 பிரதான கட்சிகளை அவர்களுடன் கூட்டணியில் இருக்கின்றனர்.

தமிழகத்தை பொறுத்தவரையில் இரண்டு பெரிய கட்சிகள். ஒன்று ஆளும் தி.மு.க., மற்றொன்று எம்.ஜி.ஆரால் நிறுவப்பட்ட அ.தி.மு.க. தனிப்பட்ட முறையில் தொண்டர்கள் பலம் என்று பார்த்தால் தி.மு.க.வை காட்டிலும், அ.தி.மு.க.விற்கு அதிகம். கடந்த தேர்தலில் அ.தி.மு.க. குறைந்த தொகுதிகளை கைப்பற்றியிருந்தாலும் 32 சதவீத வாக்குகளையும், பெரும்பான்மையான தொகுதிகளை கைப்பற்றிய தி.மு.க. 26 சதவீத வாக்குகளையும் பெற்றிருந்தது.
அ.தி.மு.க.வை பொறுத்தவரையில் இந்த தேர்தலை வாழ்வா? சாவா? என்ற முறையில் சந்திக்கிறது. கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா எப்படியாவது ஆட்சியை கைப்பற்றியே தீர வேண்டும் என்று முனைப்போடு கூட்டணியை பலப்படுத்தும் முயற்சியில் இருக்கிறார். தற்போது அ.தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க., இரண்டு கம்யூனிஸ்டு கட்சிகள், நடிகர் கார்த்திக் கட்சி, புதிய தமிழகம் போன்ற கட்சிகள் இருக்கிறது.அரசியல்லில் திடீரென்று இறங்கி கடந்த சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளில் போட்டியிட்டு 8.85 சதவீத வாக்குகளுடன் ஒரு தொகுதியில் வெற்றி பெற்ற விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.க. இந்த முறை அதிக இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என்று விரும்புகிறது. அது கூட்டணியா? அல்லது தனித்தா? என்பது குறித்து கட்சியில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திக்க தே.மு.தி.க. விரும்புவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
பா.ம.க.வை பொறுத்தவரையில் அந்த அணியா? இந்த அணியா? என்று குழப்பி வருகிறது. இரு பக்கத்திலும் இருந்து தூது வருவதாக கூறப்படுகிறது.
கூட்டணி நிலவரம் இப்படி இருக்க...
மக்களின் மனநிலை எப்படி இருக்கிறது? தி.மு.க.விற்கு பலவீனமாக இருக்கும் ஸ்பெக்ட்டரம் விவகாரம், இலங்கை தமிழர் பிரச்சினை, விலைவாசி உயர்வு, மின்வெட்டு போன்ற பிரச்சினைகள் காலை வாரி விடுமா? அல்லது சாதனைகளாக கருதப்படும் இலவச கலர் டி.வி., இலவச கியாஸ் இணைப்பு, 2 ஏக்கர் நிலம், ரேசனில் மாளிகை பொருட்கள், கலைஞர் வீடு வழங்கும் திட்டம், கலைஞர் உயிர் காக்கும் திட்டம் போன்றவை கைக்கொடுக்குமா? என்பது தெரியவில்லை.
கூட்டணி கணக்கில் வெற்றியா? பிரச்சினைகளை மையமாக வைத்து வெற்றியா? சாதனைகளுக்கு மக்கள் வாக்களிப்பார்களா? என்பது மக்களின் மன ஓட்டத்தை பொறுத்தே அமைய இருக்கிறது. 234 தொகுதிகளிலும் மக்கள் மனநிலை அப்படி தான் இருக்குமா? தொகுதிகளின் நிலவரம் என்ன? என்பது இனி வரும் காலங்களில் தெரிய வரும். மக்களின் நாடி துடிப்பை அறிந்து கொள்ள அரசியல் கட்சி தலைவர்கள் இப்போதே தயாராகி விட்டார்கள்.
கூட்டணி, தொகுதி பங்கீடு என்று அ.தி.மு.க. முதற்கட்டமாக தனது தேர்தல் பணியை முடிக்கி விட்டு இருக்கிறது.
(இன்னும் பேசலாம்)
Thursday, January 13, 2011
தல- தளபதி -கேப்டன்-இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்
தமிழாய் தமிழராய் எழுவோம்...
நம்பிக்கையுடன் இருப்போம்
புதிய சாதனை படைப்போம்
என்றும் தமிழராய் இருப்போம்...
நிறைந்த மனதோடு..
மீண்டும் சந்திப்போம்
தமிழாய் தமிழராய் எழுவோம்...
வையகம் அன்பில் திளைக்க..
அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்
--------

சேலத்தில் மாநாடு நடத்தி கூட்டணிக்கு அச்சாரம் போட்ட கேப்டன்... போயஸ் கார்டனுக்கு போகணுமா? வேண்டாமா என்று பெரிய யோசனையில் ஆழ்ந்து இருக்கிறார். கேப்டன் சார் எது எப்படியிருந்தாலும் மே மாதத்துக்குள் முடிவு பண்ணியிடுங்க...
-------
காவலன் வருமா? வராதா? என்று வடிவேல் ஸ்டைலில் ஜோசியம் நடக்க... தளபதி சத்தம் இல்லாமல் மங்காத்தா ஆடிக்கொண்டிருக்கும் தலயை பார்த்து ராக்கி கயிறு கட்டியிருக்கிறார்.
--------
கடவுள் இருக்கிறரா? இல்லையா? என்று ரோபோ சிட்டிக்கிட்ட கேட்ட கேள்விக்கு, என்ன படைத்தது டாக்டர் வசீகரன். அப்போம் கடவுள் இருக்கார் என்று ஆணித்தரமாக ஆன்மீகத்தை புகுத்திய அன்பு தலைவர் லோக்கல் அரசியல்வாதிகள் தரும் டாச்சர் தாங்க முடியாம இன்னும் 5 மாசத்துக்கு ரிஷி கேஷ் போக போறாரு...
இடையில இயக்குனர்கள் சங்க விழாவில் இயக்குனர் பாலசந்தர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த தலைவர், உலகில் நான் பார்த்து பெறாமைபடுவது துறவிகளை பார்த்து தான். அவர்களை போல என்னால் வாழ முடியவில்லை என்று அவரின் எண்ணங்களை ரசிகர்களுக்கு தெள்ள தெளிவாக்கி இருக்கிறார். ஆன்மீக மன்னனை தெருவுக்கு(அரசியலுக்கு) இழுக்க வேண்டாம் ரசிகர்களே...
---------
நம்பிக்கையுடன் இருப்போம்
புதிய சாதனை படைப்போம்
என்றும் தமிழராய் இருப்போம்...
நிறைந்த மனதோடு..
மீண்டும் சந்திப்போம்
தமிழாய் தமிழராய் எழுவோம்...
வையகம் அன்பில் திளைக்க..
அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்
--------

சேலத்தில் மாநாடு நடத்தி கூட்டணிக்கு அச்சாரம் போட்ட கேப்டன்... போயஸ் கார்டனுக்கு போகணுமா? வேண்டாமா என்று பெரிய யோசனையில் ஆழ்ந்து இருக்கிறார். கேப்டன் சார் எது எப்படியிருந்தாலும் மே மாதத்துக்குள் முடிவு பண்ணியிடுங்க...
-------
காவலன் வருமா? வராதா? என்று வடிவேல் ஸ்டைலில் ஜோசியம் நடக்க... தளபதி சத்தம் இல்லாமல் மங்காத்தா ஆடிக்கொண்டிருக்கும் தலயை பார்த்து ராக்கி கயிறு கட்டியிருக்கிறார்.--------
கடவுள் இருக்கிறரா? இல்லையா? என்று ரோபோ சிட்டிக்கிட்ட கேட்ட கேள்விக்கு, என்ன படைத்தது டாக்டர் வசீகரன். அப்போம் கடவுள் இருக்கார் என்று ஆணித்தரமாக ஆன்மீகத்தை புகுத்திய அன்பு தலைவர் லோக்கல் அரசியல்வாதிகள் தரும் டாச்சர் தாங்க முடியாம இன்னும் 5 மாசத்துக்கு ரிஷி கேஷ் போக போறாரு...
இடையில இயக்குனர்கள் சங்க விழாவில் இயக்குனர் பாலசந்தர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த தலைவர், உலகில் நான் பார்த்து பெறாமைபடுவது துறவிகளை பார்த்து தான். அவர்களை போல என்னால் வாழ முடியவில்லை என்று அவரின் எண்ணங்களை ரசிகர்களுக்கு தெள்ள தெளிவாக்கி இருக்கிறார். ஆன்மீக மன்னனை தெருவுக்கு(அரசியலுக்கு) இழுக்க வேண்டாம் ரசிகர்களே...
---------
Saturday, December 4, 2010
ஒரு நிமிஷம்...
காலை நேரத்தில... அதுவும் பரப்பான சாலையில... 10 மணிக்குள் அலுவலகம் செல்ல வேண்டும் என்றால் யப்பா... பெரிய வேலை தான். கொஞ்சம் சிந்தனையை சிதற விட்டால் ஏதாவது வண்டி மீது மோதி நிற்க வேண்டியது தான்.
குறுக்கு நெடுக்கமாக சென்று பின்னால் வரும் வண்டியை பற்றி கப்படாமல் சடன் பிரேக் போடும் ஆட்டோக்காரர்கள். சாகாசம் காட்டும் சில பைக்காரர்கள். இதெல்லாம் அலுவலகம் செல்லும் ஒவ்வொருக்கும் இது காலை நேரத்தில சந்திக்க வேண்டிய பிரச்சினைகள்.
'சிட்டியில பைக் ஒட்டுறது சாதாரணம் இல்லப்பா'
'ம்...'
'சர்க்ஸ்ல ஓட்டுறது மாதிரி...'
'ம்...ம்..'
'லாரியை முந்தி போனால் என்ன ஆகும்?
முன்னாள் ஆக வேண்டியது தான்'.
இப்படி நகைச்சுவையாக சொன்னாலும்... லாரி விஷயத்தில் ரொம்பவே எச்சரிக்கையாக இருக்க வேண்டியிருக்கிறது.
வண்டிக்கு டீசல் போடும் லாரி டிரைவர்களை விட தனக்கு டீசல் போட்டு ஓட்டும் டிரைவர்களே அதிகம். பின்ன லாரி ரோட்டுல எப்படி போகும்.
லாரி விபத்து மூலம் இந்த ஆண்டில் சென்னையில் மட்டும் 100-க்கும் மேற்பட்டவர்கள் இறந்து இருக்கிறார்கள்.
'மிதமான வேகம் மிக நல்லது' என்று போட்டு இருந்தாலும் என்னவோ பந்தய குதிரை போல தான் சாலையில் பறக்கும் வாகனங்கள்.
நாம ஒழுங்கா போனாலும் எதிர வரவான் ஒழுங்கா வருணுமே...
கொஞ்சம் சிந்தித்து பாருங்களேன்.
---------
கே.டி.வியில் 'த காடியன்' என்ற படத்தை பார்க்க நேர்தது. கடற்படை மீட்பு குழுவினரை பற்றிய படம். ரொம்பவே அற்புதமாக இருந்தது. படம் என்று சொல்வதை விட ஒரு பாடம் அல்லது பயிற்சி என்று சொல்லாம்.
அந்த அளவிற்கு அந்த படத்தில் மீட்பு குழுவின் பணிகள் பற்றியும், அதற்கு தயார் ஆகுவதற்கு வேண்டிய தகுதிகள் பற்றியும் சிறப்பாக எடுத்துரைத்த படம்.
கடலில் தத்தளிக்கும் பயணிகளை ஹெலிகாப்டரில் சென்று மீட்கும் மீட்பு குழுவினரின் மனநிலை அழகாக படம் பிடிக்கப்பட்டுள்ளது.
புயல் காற்று, அலை மூழ்கும் கப்பல், அலறும் பயணிகள், மீட்பு படலம் என்று ரொம்பவே ஒன்ற வைத்திருக்கிறது.
--------
சக பதிவர், என்னுடைய நண்பர் அத்திரிக்கு வரும் 19 -தேதி பிறந்தநாள்.
சிவசைலத்தில் பிறந்து, சிவ சைலம் என்ற பெயரில் பதிவுகள் எழுதி இணைய நட்பு வட்டாரங்களை தனது கைக்குள் வைத்திருக்கும் பாசத்திற்குரிய அத்திரிக்கு வாழ்த்துக்களை கூறுவோம்.

Saturday, September 11, 2010
நம்ம ஹீரோவுக்கு பிறந்தநாள்
எந்த கடவுளுக்கும் இல்லாத பெருமை விநாயருக்கு உண்டு. முழு முதற் கடவுளான விநாயகர் குழந்தைகளின் கடவுள் என்று போற்றப்படுகிறார்.

குழந்தைகளை வித விதமான ஆடைகளை அணிவித்து பெற்றோர் அழகு பார்ப்பதை போல விநாயகரையும் பல்வேறு வடிவங்களில் வடித்து பக்தர்கள் அழகு பார்க்கும் தினம் தான் விநாயகர் சதுர்த்தி.
மண் பிள்ளையார், கிரிக்கெட் விளையாடும் பிள்ளையார், சறுக்கு விளையாடும் விநாயகர், குழந்தை பிள்ளையார் என்று தங்களது கற்பனைக்கு தகுந்தவாறு அழகுபடுத்தி விநாயகர் சதுர்த்தியை குதுகலப்படுத்தியுள்ளனர்.
சென்னையில் பல இடங்களில் வித விதமான பிள்ளையார்களை குழந்தைகள் பலர் விரும்பி வாங்கி சென்ற காட்சியை காண முடிந்தது.
சும்மாவா... குழந்தைகளின் ஹீரோவாச்சே...
நம்ம ஹீரோவும் அவருதாங்கோ...

Subscribe to:
Posts (Atom)