Sunday, March 21, 2010

உலக தண்ணீர் தினம்...






பொன் முட்டை இடும்
வாத்தை அறுத்தாய்-மனிதா
தண்ணீர் சுரக்கும்
ஆற்று மணலையும் சுரண்டினாய்...!

நிழல் தந்து வான் உயர்ந்து நின்ற
மரங்களை வெட்டி சாய்த்தாய்-மனிதா
உனக்கு நீயே கொள்ளி வைத்தாய்...!

மரமில்லை...ஆற்று மணல் இல்லை
உன் அக்கிரமித்தில் மறைந்து போனான் வருணன்!

பார்த்து பார்த்து கண்கள் கூசி போயிற்று
வறண்டு போனது ஆறு மட்டுமல்ல....
உன் இதயமும் தான்...!

விட்டு விடு....
என் பாத சுவடுகளை பார்த்து...

வறண்ட பாதையில்
தண்ணீர் தேடி போகிறேன்....
எதிர்கால சந்ததிக்காக...

12 comments:

goma said...
This comment has been removed by the author.
goma said...

காய்ந்து போன நிலம் கண்ட கண்கள், வடிக்கும் கண்ணீரே !
உலக தண்ணீர் தினத்துக்குக் கவிதை எழுத வடிந்தாயா

March 21, 2010 8:09 PM

அக்பர் said...

கவிதை அருமை. ஆனால் இவர்கள் திருந்துவார்களா?

கார்த்திகைப் பாண்டியன் said...

:-((((((((

ரொம்ப நாள் கழிச்சு வந்தாலும் ஒரு நல்ல விஷயத்தோட வந்து இருக்கீங்க தல..மக்கள் யோசிக்கணும்..

கடையம் ஆனந்த் said...

goma said...

காய்ந்து போன நிலம் கண்ட கண்கள், வடிக்கும் கண்ணீரே !
உலக தண்ணீர் தினத்துக்குக் கவிதை எழுத வடிந்தாயா
//
வாங்க கோமா. அட இது நல்லாயிருக்கே...

கடையம் ஆனந்த் said...

வாங்க அக்பர்... திருடனாய் பார்த்து திருந்தா விட்டால்....திருட்டை ஒழிக்க முடியாது. தலைவர் சொன்னது தான் ஞாபகத்துக்கு வருகிறது.

கடையம் ஆனந்த் said...

ஐ யம் பேக்....
நன்றி கார்த்திகை பாண்டியன்.

ராமலக்ஷ்மி said...

அருமையான விழிப்புணர்வுக் கவிதை ஆனந்த்.

ப்ரொஃபைல் படத்தில் மகாக்கவி இடம் பெற்றிருப்பதும் அருமை.

விக்னேஷ்வரி said...

கவிதைல நல்லா சொல்லிருக்கீங்க. மனசுக்கு வருத்தமாயிருக்கு.

மாதேவி said...

"வறண்ட பாதையில்
தண்ணீர் தேடி போகிறேன்...."

நல்ல கவிதை.

கடையம் ஆனந்த் said...

நன்றி akka
நன்றி விக்னேஷ்வரி
நன்றி மாதேவி

Several tips said...

மிகவும் அருமை