டிசம்பர் மாதம் ரொம்பவே சிறப்பான மாதமாக தெரிகிறது. புகழ் பெற்றவர்கள் பலர் இந்த மாதத்திலே பிறந்து இருக்கிறhர்கள். அந்த வகையில் இணைய பதிவுலகில் பலரின் அன்பை பெற்று விளங்கும் அன்பு சகோதிரி ராமலட்சுமிக்கு டிசம்பர் 28-ந் தேதி பிறந்தநாள்.
பதிவுலகில் முத்துச்சரம் தொடுக்கும் இவர் இதுவரை 73 பதிவுகள் எழுதியுள்ளார். அனைத்தும் முத்துக்கள் தான். பிறர் மனம் கோணாமல் பதிவு எழுதுவதிலும்....வரும் மறுமொழிகளுக்கு அழகாக பதில் அளிப்பதிலும் அவரின் திறமை அழகாக பளிச்சிடும்.
சமுக பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் அளித்தும், உரையாடல், சிறுகதை, கவிதை என்று இவரின் திறமைகள் விரிகின்ற போதும் புகைப்படங்கள் எடுப்பதிலும் போட்டிகளில் கலந்து கொள்வதிலும் மற்றவர்களை வியக்க வைக்கிறhர். இந்த சாதனைகள் எல்லாம் அமைதியாகவே நடைபெற்று வருவது சிறப்புமிக்கது. நிறை குடம் நீர் தழும்பாது என்பதற்கு இவர் சிறந்த உதாரணம்.
இவரை பற்றி இவர் இவ்வாறு குறிப்பிடுகிறhர்.
பிறந்து வளர்ந்தது- திருநெல்வேலிவசித்து வருவது-பெங்களூரு.
பள்ளி-இக்னேஷியஸ் கான்வென்ட், பாளை.கல்லூரி்சாராள்தக்கர், பாளை. படிப்பு-எம்.ஏ, எம்.பில் ஆங்கில இலக்கியம்.
பள்ளி, கல்லூரி ஆண்டு மலர்களில் தொடங்கிய எழுத்துப் பயணம் நண்பர் வட்டம், இலக்கியப் பத்திரிகை, திண்ணை இணைய இதழ் வார்ப்பு, கவிதை வாராந்திரி எனத் தொடர்ந்து இப்போது விகடன் இணைய தளத்திலும்.. *சமீப காலத்தில் கலைமகள், வடக்கு வாசல், இலக்கிய பீடம் பத்திரிகைகளிலும் என் எழுத்துக்கள் தடம் பதிக்க ஆரம்பித்துள்ளன.
தொடர்ந்து எழுதுவது என் வழக்கமாக இல்லாமல் தோன்றும் போது எழுதுவதே என் பழக்கமாக இருந்து வந்தது. அதை மெதுவாக வலைப்பூ மாற்றி வருகிறது.
சமூகம் வாழ்க்கை மீதான் என் பார்வைகளை எண்ணங்களை முத்துச்சரமாகக் கோர்த்து வருகிறேன். புகைப்படக்கலை மீதான ஆர்வம் ‘தமிழில் புகைப்படக்கலை’ தளம் நடத்தும் போட்டிகளில் கலந்து கொள்வதில் தொடர்கின்றது.
என்று குறிப்பிடுகிறhர்.
இவரை பற்றி என் கருத்து
என்னோட பதிவுலக நண்பர்களுள் முதன்மையானவர் ராமலக்ஷ்மி அக்கா. இவர் யார் மனதையும் புண்படுத்த நினைக்காத எண்ணமும், மற்றவர்களுக்கு ஊக்கமும் கொடுக்கின்றவராகவும் திகழ்கிறhர். இவரை என் சொந்த சகோதிரியாகவே நான் கருதுகிறேன். இவரோட அனைத்து பதிவுகளும் எனக்கும் மிகவும் பிடித்தவையாகும்.
இவரின் வலைத்தளம் முத்துச்சரம் http://tamilamudam.blogspot.com/
இந்த தளத்திற்கு சென்றhல் இவரின் படைப்புகளையும், புகைப்பட ஓவியங்களையும் காண முடியும். படிக்கலாம்...ரசிக்கலாம்...
வலைதளத்தில் நிறைய விருதுகள் பெற்றிருக்கிறhர். எளிய நடையில் கவிதை எழுதுவதும், புகைப்படங்களில் சமுக மாற்றத்தை காட்டுவதும் இவரின் சிறப்பு.
இவரின் சாதனைகள் தொடர வேண்டும். அவரின் எழுத்தாற்றல் உலகம் முழுவதும் பரவ வேண்டும்.
அன்பு சகோதிரிக்கு எனது இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்
36 comments:
எப்பவாச்சும் வர்ற பின்னூட்டத்துக்கு பதில் போடவே எங்களால முடியல. அனா நீங்க நேரம் ஒதுக்கி வாழ்த்து சொல்லிருக்கீங்க. பிறந்தநாள் வாழ்த்து சொல்ற அளவுக்கு மற்றவர்களின் நன்மதிப்பை பெற்று இருக்கும் அக்காவுக்கு நானும் உங்க தளம் மூலமாக வாழ்த்து சொல்கிறேன். வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் அப்படின்னு சொல்றதெல்லாம் அரசியல்ல. நல்ல மதிப்பும் மனசும் போதும். யாரும் யாரையும் வாழ்த்தலாம் அப்படின்னு நினைக்குறது என் சுபாவம்.
சரண் said...
எப்பவாச்சும் வர்ற பின்னூட்டத்துக்கு பதில் போடவே எங்களால முடியல. அனா நீங்க நேரம் ஒதுக்கி வாழ்த்து சொல்லிருக்கீங்க. பிறந்தநாள் வாழ்த்து சொல்ற அளவுக்கு மற்றவர்களின் நன்மதிப்பை பெற்று இருக்கும் அக்காவுக்கு நானும் உங்க தளம் மூலமாக வாழ்த்து சொல்கிறேன்.
//
வாங்க சரண் உங்களுடைய முதல் வருகைக்கு நன்றி.
//
வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் அப்படின்னு சொல்றதெல்லாம் அரசியல்ல. நல்ல மதிப்பும் மனசும் போதும். யாரும் யாரையும் வாழ்த்தலாம் அப்படின்னு நினைக்குறது என் சுபாவம்.
//
உண்மை தான் சரண். வாழ்த்துவதற்கு நல்ல மனசு போதும். நன்றி.
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி பூங்கொத்துக்களோடு!!!
அக்காவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்..!
நன்றி அன்புடன் அருணா.
நன்றி உண்மை தமிழன். உங்களின் முதல் வருகைக்கு நன்றி...நன்றி...நன்றி.
//நன்றி உண்மை தமிழன். உங்களின் முதல் வருகைக்கு நன்றி...நன்றி...நன்றி.//
நான் இப்பதான் வாழ்த்துறதுக்கு மனசு போதும். வயசு முக்கியமில்லைன்னு சொல்லிருக்கேன். நீங்க முதல் தடவை வந்த எனக்கு ஒரு நன்றி...பெரியவர் உண்மைத்தமிழனுக்கு மூணு தடவையா... இதை நான் வன்மையாக...ச்ச...அரசியல் கூட்டத்துப் பேச்சு காதுல உழுந்ததுல இருந்து இப்படியே வார்த்தை வருது. அன்பாக கண்டிக்கிறேன்.
பாஸ்...சும்மா ஜாலிக்கு சொன்னேன். சின்ன வயசுல இருந்து புத்தகங்கள் தவிர வேற நண்பர்கள் யார்கிட்டயும் நெருக்கமா இல்லாமையே இருந்துட்டேன். 2008 நவம்பர்ல இருந்து எழுதிட்டு இருந்தாலும் தமிழ்மணம், திரட்டி மாதிரியான வட்டத்துக்குள்ள வந்து ஒரு மாசம் தான் ஆகப் potuthu. ஆனா நிறைய பதிவர்கள்கிட்ட ஜாலியா உரையாடுற மனநிறைவைத் தருது இந்த அனுபவம். அதனாலதான் மேல ஒரு ச்சும்மா கமென்ட்
அக்காவுக்கு உளமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்
அடிக்கடி வாங்க சரண். நிறைய பேசலாம்.
வாங்க கரிசல்காரன். நன்றி.
சகோதரிக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இரவீ
ரொம்ப நாளா காணோம்!?
நம்ம (ஊர்) ராமலெஷ்மி அக்காவிற்கு இனிய பிறந்த நாள்வாழ்த்துக்கள்.
அப்படியே நம்ம (ஊர்) நண்பர் அத்திரிக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
ராமலக்ஷ்மி இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் :-)
ஆனந்த் ரொம்ப சீக்கிரம் சொல்லிட்டீங்க! :-)
வாங்க துபாய் ராசா. நன்றி.
வாங்க கிரி. நல்ல விஷயங்களே சீக்கிரமே சொல்லிவிட வேண்டியதானே.
வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி :)
அக்காவுக்கு அட்வான்ஸ் பிறந்த நாள் வாழ்த்துக்கள்
உங்கள் அன்பிற்கும் வாழ்த்துக்களுக்கும் மிகவும் நன்றி ஆனந்த்.
வாழ்த்தியிருக்கும் அனைவருக்கும் என் அன்பான நன்றிகள்.
வாழ்த்துக்கள்... அவர்களுக்கு,
நன்றி....
உங்களுக்கு.
அன்பு சகோதிரிக்கு எனது இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்...
வாய்பழித்த உங்களுக்கு நன்றி
நன்றி முத்துலட்சுமி அக்கா.
நன்றி அத்திரி.
நன்றிக்கா.
சி. கருணாகரசு நன்றி
ஆ.ஞானசேகரன் நன்றி
வாழ்த்துக்கள் அக்கா
நன்றி நசரேயன்
ஆனி கூடி போச்சு தல.
வாழ்த்துகள்
பிறந்த நாள் வாழ்த்துக்கள்..!
மீண்டும் சுறுசுறுப்பாக வாங்க ரவீ.
வாங்க தியா
வாங்க அக்பர்
பதிவிட்ட அன்பிற்கும் என் சார்பில் அனைவருக்கும் நன்றி நவின்றமைக்கும் நன்றிகள் ஆனந்த்.
வாழ்த்தியிருக்கும்,
சரண்
அருணா
உண்மைத் தமிழன்
கரிசல்காரன்
துபாய் ராஜா
கிரி
முத்துலெட்சுமி
அத்திரி
கருணாகரசு
ஞானசேகரன்
நசரேயன்
தியா
அக்பர்
அனைவருக்கும் என் அன்பான நன்றிகள்!!!
நன்றி சொல்ல வந்த அக்காவிற்கு நன்றி. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 28.12.....
Post a Comment